விழுப்புரம் அருகே ஆற்றில் கிடைத்த சோழர் கால சிவலிங்கம்! | ருத்ர பாகம் மட்டும் கண்டெடுப்பு | TN32NEWS
விழுப்புரம் மாவட்டம் வளவனூர் அருகே உள்ள எஸ்.மேட்டுப்பாளையம் கிராமத்தில் தென்பெண்ணையாற்றங்கரையோரம் சோழர் காலத்தைச் சேர்ந்ததாகக் கருதப்படும் சிவலிங்கத்தின் உருளை வடிவிலான ருத்ர பாகத்தை இளைஞர்கள் கண்டெடுத்துள்ளனர்.
கிரிக்கெட் விளையாடச் சென்றபோது ஆற்று நீரில் அடித்து வரப்பட்ட நிலையில் சிவலிங்கத்தின் ருத்ர பாகத்தை கண்ட இளைஞர்கள், அதனை மீட்டு கரையோரம் உள்ள சிவன் கோவில் வளாகத்தில் வைத்துள்ளனர்.
சிவலிங்கத்தின் விஷ்ணு பாகம் மற்றும் ஆவுடையார் பாகமும் கிடைத்தால் முழுமையாக அமைத்து வழிபாடு செய்ய கிராம மக்கள் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த சிவலிங்கம் எந்த காலத்தைச் சேர்ந்தது என்பது குறித்து தொல்லியல் மற்றும் வரலாற்று ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
TN32NEWS – விழுப்புரம் மாவட்டத்தின் முக்கிய செய்திகளை உடனுக்குடன் அறிய Subscribe செய்யுங்கள்.
#விழுப்புரம் #வளவனூர் #எஸ்மேட்டுப்பாளையம் #தென்பெண்ணையாறு #சிவலிங்கம் #சோழர்காலம் #தொல்லியல் #வரலாறு #TN32NEWS #VillupuramNews #TamilNews