*21 வகை மாற்றுத்திறனாளிகளையும் மக்கள் தொகை கணக்கெடுப்பில் பதிவு செய்ய கோரி போராட்டம்! | விழுப்புரம்**
**விழுப்புரம்:** 21 வகை மாற்றுத்திறனாளிகளையும் 2027-ம் ஆண்டு நடைபெற உள்ள மக்கள் தொகை கணக்கெடுப்பில் முறையாக பதிவு செய்ய வேண்டும் என வலியுறுத்தி, விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை மாற்றுத்திறனாளிகள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
500-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் பங்கேற்ற இந்த போராட்டத்தில், 21 வகை மாற்றுத்திறனாளிகளும் கணக்கெடுப்பில் இடம்பெற வேண்டும் என்றும், அரசு நலத்திட்டங்கள் கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோஷங்கள் எழுப்பினர்.
பின்னர் உதவி கலெக்டர் (பயிற்சி) ஸ்ரீரஷத் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அவரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டதை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.
TN32NEWS – விழுப்புரம் மாவட்ட செய்திகளுக்கு Subscribe செய்யுங்கள்.**
#விழுப்புரம் #மாற்றுத்திறனாளிகள் #மக்கள்தொகைகணக்கெடுப்பு #Disability #Villupuram