விழுப்புரம் | அமைச்சர் வன்னியரசு பரபரப்பு பேட்டி
திருமாவளவனை முதல்வராக்குவதுதான் எங்கள் கனவு” – அமைச்சர் வன்னியரசு**
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே கொடுக்கூர் அரசு ஆதிதிராவிடர் நடுநிலைப்பள்ளியில் சமூகநீதித் துறை அமைச்சர் வன்னியரசு ஆய்வு மேற்கொண்டார்.
பள்ளி கட்டிடம், கழிவறை, சமையலறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஆய்வு செய்த அவர், மாணவர்களுக்கு உணவு முறையாக வழங்கப்படுகிறதா என்றும் கேட்டறிந்தார். ஆசிரியர்களிடம் பள்ளியின் கூடுதல் தேவைகள் குறித்தும் கேட்டறிந்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் வன்னியரசு, **“CM 2031” பதிவெண் கொண்ட காரில் விசிக தலைவர் திருமாவளவன் பயணித்தது விளம்பரப் படப்பிடிப்புக்காக எடுக்கப்பட்ட காட்சி. அதற்கான விளக்கம் ஏற்கெனவே அளிக்கப்பட்டுள்ளது. இதை அரசியலாக்குவது ஏற்க முடியாது”** என்று தெரிவித்தார்.
மேலும், **“ஒவ்வொரு அரசியல் கட்சியினருக்கும் தங்கள் தலைவரை முதல்வராக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். அதேபோல், திருமாவளவனை முதல்வராக்குவதுதான் எங்களது கனவு”** என்றும் அமைச்சர் கூறினார். :
📍 **விழுப்புரம் | விக்கிரவாண்டி**
**TN32NEWS | உங்கள் ஊர் செய்திகள்**
#விழுப்புரம் #வன்னியரசு #திருமாவளவன் #VCK #CM2031