“லஞ்சம் கேட்கிறார்” கழுத்தில் புகார் அட்டை! முன்னாள் ராணுவ வீரர் நூதன போராட்டம் | விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு
விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு கழுத்தில் புகார் அட்டையை தொங்கவிட்டபடி மனு கொடுக்க வந்த முன்னாள் ராணுவ வீரரால் பரபரப்பு ஏற்பட்டது.
மேல்மலையனூர் தாலுகா மேல்வயலாமூர் கிராமத்தைச் சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் பிரகாஷ் (42), மேல்மலையனூர் தாலுகா அலுவலகத்தில் நில அளவையராக பணியாற்றி வரும் ராம்குமார் என்பவர், வரைபடம் மாற்ற நிலம் அளவீடு செய்ய லஞ்சம் கேட்பதாக புகார் அட்டையில் குறிப்பிட்டிருந்தார்.
இதனை கவனித்த போலீசார் அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் பிரகாஷ் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தார்.
மனுவைப் பெற்ற அதிகாரிகள், புகார் குறித்து விசாரணை நடத்தப்படும் என தெரிவித்தனர்.
இந்த சம்பவத்தால் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
குறிப்பு: லஞ்சம் கேட்டதாக மனுவில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டு குறித்து அதிகாரப்பூர்வ விசாரணை முடிவு வெளியாகவில்லை.
#விழுப்புரம் #லஞ்சபுகார் #முன்னாள்ராணுவவீரர் #கலெக்டர்அலுவலகம் #மேல்மலையனூர் #நிலஅளவையர் #புகார் #TN32NEWS #VillupuramNews #TamilNews