ஏரிபுறக்கரை கிராமத்தில் குடிநீர் தட்டுப்பாடு!
அதிராம்பட்டினம் அருகேயுள்ள ஏரிபுறக்கரை கிராமத்தில் கடந்த 4 நாட்களாக குடிநீர் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.
மலம் கசடு கழிவுநீர் சுத்திகரிப்பு ஆலைக்கான குழாய் பதிக்கும் பணிக்காக ஜேசிபி மூலம் தோண்டப்பட்டபோது, குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அப்பகுதி மக்களின் எதிர்ப்பால் பணிகள் பாதியில் நிறுத்தப்பட்ட நிலையில், உடைந்த குடிநீர் குழாய் இதுவரை சீரமைக்கப்படவில்லை என பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
குடிநீர் விநியோகத்தை உடனடியாக சீரமைத்து, பாதுகாக்கப்பட்ட குடிநீர் கிடைப்பதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.