Public App Logo
Profile Picture

அதிரை எக்ஸ்பிரஸ்

@adiraixpress
27Followers
2Following
கல்வி மற்றும் சமூக சேவையில் தடம் பதித்த கல்வியாளர் ஹாஜி எஸ்.எம்.எஸ். ஷேக் ஜலாலுதீன் – நினைவேந்தல்

அதிராம்பட்டினத்தின் கல்வி வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றியவரும், கல்வி மற்றும் சமூக சேவையில் தன்னலமற்ற பங்களிப்பை வழங்கியவருமான ஹாஜி எஸ்.எம்.எஸ். ஷேக் ஜலாலுதீன் அவர்களை நினைவுகூர்கிறோம்.

அவரது முன்னெடுப்பில் உருவான முக்கிய கல்வி நிறுவனங்கள்:

• காதிர் முகைதீன் கல்லூரி
• காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி
• காதிர் முகைதீன் பெண்கள் மேல்நிலைப் பள்ளி
அதிராம்பட்டினம்

கல்வியின் மூலம் தலைமுறைகளை உருவாக்க வேண்டும் என்ற உயரிய நோக்குடன் தனது வாழ்நாளை கல்வி, சேவை மற்றும் சமூக நலனுக்காக அர்ப்பணித்த அவரது பணி, இன்றும் பல தலைமுறைகளுக்கு வழிகாட்டியாகவும், ஊக்கமாகவும் திகழ்கிறது.

அவரது கல்விப் பணியும், சமூக சேவையும் என்றும் நினைவுகூரப்படும்.

அல்லாஹ் அவர்களுக்கு ஜன்னத்துல் ஃபிர்தவுஸ் எனும் உயர்ந்த சுவனத்தை வழங்குவானாக. ஆமீன்.

என்றும் நினைவில்...
என்றும் மரியாதையில்... <nis:link nis:type=tag nis:id=adirampattinam nis:value=adirampattinam nis:enabled=true nis:link/>
<nis:link nis:type=tag nis:id=kmccollage nis:value=kmccollage nis:enabled=true nis:link/> 
<nis:link nis:type=tag nis:id=khadirmohaideencollage nis:value=khadirmohaideencollage nis:enabled=true nis:link/>
பயன்பாட்டில் இல்லாத ரேஷன் கார்டுகள் முடக்கம்!

போலிப் பதிவுகளைத் தடுக்கும் நடவடிக்கையாக, தொடர்ந்து 6 மாதங்கள் பயன்பாட்டில் இல்லாத குடும்ப அட்டைகள் நாளை முதல் முடக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

முடக்கப்பட்ட குடும்ப அட்டைகளை 3 மாதங்களுக்குள் e-KYC செய்து மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டு வரலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
🚨 அம்மாப்பட்டினம் அருகே சாலை விபத்து: அதிராம்பட்டினத்தை சேர்ந்த இருவர் உயிரிழந்ததாக தகவல்
அம்மாப்பட்டினம் அருகே இன்று (29-09-2026) நடைபெற்ற சாலை விபத்தில், அதிராம்பட்டினத்தை சேர்ந்த இருவர் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இருவரும் இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தபோது, எதிரே வந்த காரின் மீது மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. விபத்தில் இருசக்கர வாகனம் முற்றிலும் சேதமடைந்துள்ள நிலையில், சம்பவ இடத்தில் பொதுமக்கள் திரண்டனர்.

உயிரிழப்பு மற்றும் விபத்து தொடர்பான முழுமையான விவரங்கள் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட வேண்டியுள்ளது.
29-09-2026 | Adiraixpress
BREAKING NEWS ::
செய்திக்கு மறுப்பு :

அதிராம்பட்டினத்தில் நள்ளிரவுகளில் சுற்றித்திரிந்த ஒருவரை பிடித்த செய்தியை படத்துடன் அதிரை எக்ஸ்பிரஸ் பதிந்த நிலையில் அதன் உண்மைத்தன்மை குறித்து ஆராய்ந்தோம்.

அப்போது பிடிபட்ட நபர் எந்தவித குற்ற பின்னணியை கொண்டவராக இல்லை என்பதும் சற்று மன பிறழ்வு நோயால் தூக்கமின்றி செய்வறியாது ஊருக்குள் சுற்றி திரிந்தும் சில சமயங்களில் சுவர் ஏறி குதித்தும் உள்ளார்.

அவர் செய்த இச்செயலை யாரும் ஏற்று கொள்ள இயலாதுதான்,ஆனால் சைக்காட்ரிக்ஸ் பிரச்சினைகள் உள்ள நபர் அவர் செய்வது அவருக்கே கூட சரியா தவறா என தெரியாது.

இந்த நிலையில் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்ட அந்த நபரை இன்று உறவினர்களை வரவழைத்து ஒப்படைத்துள்ளனர் அதிராம்பட்டினம் மனிதநேய ஜனநாயக கட்சியினர்.

ஆகவே முந்தைய செய்தியை நீக்குவதோடு இந்த சம்பவம் குறித்த தகவல்களையும் மனித நேயத்துடன் அதிரை எக்ஸ்பிரஸ் திரும்ப பெற்று கொள்கிறது.
அதிராம்பட்டினம் 25வது வார்டு கவுன்சிலர் ராக்கப்பனுக்கு ‘சேவை ரத்னா’ விருது

அதிராம்பட்டினம்: அதிராம்பட்டினம் நகராட்சியின் 25வது வார்டு கவுன்சிலர் ராக்கப்பனின் மக்கள் சேவையை பாராட்டி, சென்னையைச் சேர்ந்த நவீன் ஃபைன் ஆர்ட்ஸ் என்ற தனியார் அமைப்பு சார்பில் ‘சேவை ரத்னா’ விருது வழங்கி கவுரவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் உள்ள தனியார் அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கவுன்சிலர் ராக்கப்பனுக்கு நவீன் ஃபைன் ஆர்ட்ஸ் அமைப்பின் சார்பில் இந்த விருது வழங்கப்பட்டது.

அதிராம்பட்டினம் 25வது வார்டில் கடந்த சில மாதங்களாக நவீன் ஃபைன் ஆர்ட்ஸ் அமைப்பின் சார்பில் கள ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வார்டுக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் பொதுமக்களை நேரடியாக சந்தித்து, அவர்களின் கருத்துகள் மற்றும் வார்டில் மேற்கொள்ளப்பட்டுள்ள அடிப்படை வசதி பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த ஆய்வுகளின் அடிப்படையில், பொதுமக்களின் தேவைகளை நேரடியாக கேட்டறிந்து, வார்டின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதற்காக மேற்கொள்ளப்பட்ட பணிகளை கருத்தில் கொண்டு கவுன்சிலர் ராக்கப்பன் ‘சேவை ரத்னா’ விருதுக்கு தேர்வு செய்யப்பட்டதாக நவீன் ஃபைன் ஆர்ட்ஸ் அமைப்பு தெரிவித்துள்ளது.

மேலும், 25வது வார்டுக்குட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ள வேண்டிய அடிப்படை பணிகளில் சுமார் 80 சதவீதம் பணிகள் நிறைவு செய்யப்பட்டுள்ளதாகவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. இதுவும் விருது வழங்குவதற்கான முக்கிய காரணங்களில் ஒன்றாக இருந்ததாக கூறப்படுகிறது.

மக்களின் தேவைகளை நேரடியாக அறிந்து செயல்படுதல், வார்டின் அடிப்படை வசதிகள் தொடர்பான பணிகளை முன்னெடுத்தல் உள்ளிட்ட செயல்பாடுகளை அடிப்படையாகக் கொண்டு இந்த விருது வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ‘சேவை ரத்னா’ விருதைப் பெற்றுக்கொண்ட கவுன்சிலர் ராக்கப்பனுக்கு, அதிராம்பட்டினம் 25வது வார்டு பொதுமக்கள் மற்றும் ஆதரவாளர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
அதிராம்பட்டினத்தில்  மழை வேண்டி தொழுகை  அனைவரும் தவறாது கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம் !!
அதிராம்பட்டினம்  பகுதியில் திருடன் 
 நடமாற்றம் ஜாக்கிரதையாகா மக்கள் இருக்கவும்!!
அதிராம்பட்டினத்தில் நீண்ட நாட்களாக அள்ளப்படாமல் தேங்கிக் கிடந்த குப்பைகளால் பொதுமக்கள் அவதியடைந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த இளைஞர் ஒருவர், தேங்கிக் கிடந்த குப்பைகளை அப்புறப்படுத்தக் கோரி, அவற்றை சாலையில் கொட்டி தனது எதிர்ப்பை வெளிப்படுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையடுத்து சம்பவம் குறித்து தகவல் அறிந்த அதிகாரிகள் சம்பந்தப்பட்ட பகுதிக்கு நேரில் சென்று பார்வையிட்டனர். அங்கு தேங்கியிருந்த குப்பைகள் மற்றும் சாலையில் சிதறிக் கிடந்த கழிவுகளை அகற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

நீண்ட நாட்களாக குப்பைகள் அகற்றப்படாமல் இருந்த நிலையில், இளைஞரின் எதிர்ப்பைத் தொடர்ந்து அதிகாரிகள் களத்திற்கு வந்து நடவடிக்கை எடுத்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே கவனம் பெற்றுள்ளது.

குப்பைகள் தொடர்ந்து தேங்காமல், வழக்கமான முறையில் தூய்மைப் பணிகள் மேற்கொள்ள வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
Video 9
CMP வாய்க்காலில் கழிவுநீர் கலப்பு:

நீர்வளத்துறை – நகராட்சி நிர்வாகத்துறை இணைந்து நடவடிக்கை எடுக்க கோரிக்கை

அதிராம்பட்டினம்: அதிராம்பட்டினம் CMP வாய்க்காலில் கழிவுநீர் கலப்பதை தடுத்து, முக்கியமான நீர்வழித்தடங்களை பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் அதிராம்பட்டினம் நகரத் தலைவர் Z. முகம்மது தம்பி, நீர்வளத்துறை மற்றும் அதிராம்பட்டினம் நகராட்சி நிர்வாகத்துறைக்கு தனித்தனியாக கடிதம் அனுப்பியுள்ளார்.

அந்தக் கடிதத்தில், அதிராம்பட்டினத்தின் முக்கிய நன்னீர் கால்வாய்களில் ஒன்றாக CMP வாய்க்கால் விளங்கி வருவதாகவும், இதன் மூலம் 15-க்கும் மேற்பட்ட குளங்களுக்கு நீர் செல்லும் பிரதான நீர்வழித்தடமாக இருந்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த முக்கிய நீர்வழித்தடத்தில் 1,000-க்கும் மேற்பட்ட வீடுகளிலிருந்து கழிவுநீர் குழாய்கள் இணைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் CMP வாய்க்காலில் கழிவுநீர் கலந்து, அதனைச் சார்ந்துள்ள குளங்களும் மாசடைந்து, சுகாதார சீர்கேடு ஏற்படும் நிலை உருவாகியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதிராம்பட்டினம் நகரம் முழுவதும் போதுமான கழிவுநீர் வடிகால் வசதிகள் ஏற்படுத்தப்படாததே, நன்னீர் செல்ல வேண்டிய நீர்வழித்தடங்களில் கழிவுநீர் கலப்பதற்கான முக்கிய காரணங்களில் ஒன்றாக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதனால் பொதுமக்களின் சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் பாதிக்கப்படும் நிலை ஏற்படுவதுடன், பாரம்பரிய நீர்நிலைகளும் மாசுபடும் அபாயம் உள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே, நீர்வளத்துறையும் அதிராம்பட்டினம் நகராட்சி நிர்வாகத்துறையும் ஒருங்கிணைந்து கள ஆய்வு மேற்கொண்டு, CMP வாய்க்காலில் கழிவுநீர் கலப்பதை தடுத்து, தேவையான மாற்று கழிவுநீர் வடிகால் வசதிகளை ஏற்படுத்தி, மாசுபடும் நிலையில் உள்ள நீர்நிலைகளை பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய யூனியன் முஸ்லீம் லீக் அதிராம்பட்டினம் நகரத் தலைவர் Z. முகம்மது தம்பி கோரிக்கை விடுத்துள்ளார்.
முந்தைய செய்தி : https://www.facebook.com/share/r/19eWqc3hPV/
அதிராம்பட்டினம் நகராட்சி அழைப்பிதழில் முதலமைச்சர் பெயர் இல்லை?

“மறைத்தது ஏன்?” – அதிரை தவெக கேள்வி.

அதிராம்பட்டினம் நகராட்சி சார்பில் 22.09.2026 அன்று நடைபெற உள்ள நிகழ்ச்சிக்காக வெளியிடப்பட்ட அழைப்பிதழில், தமிழக அரசின் பெயர் மற்றும் முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் அவர்களின் பெயர் இடம்பெறவில்லை எனக் கூறி அதிரை தவெக சார்பில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

அழைப்பிதழில் நகராட்சி நிர்வாகத்தின் பெயர் இடம்பெற்றுள்ள நிலையில், “தமிழக அரசின் பெயர் எங்கே? முதலமைச்சர் ஜோசப் விஜய்யின் பெயரை மறைத்தது ஏன்?” என அதிரை தவெக தரப்பில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

மேலும், “நகராட்சியின் இந்த செயல் ஏற்புடையது அல்ல” எனக் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக முதலமைச்சராக சி. ஜோசப் விஜய் தற்போது பதவி வகித்து வருவது குறிப்பிடத்தக்கது.
ஏரிபுறக்கரை கிராமத்தில் குடிநீர் தட்டுப்பாடு!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள ஏரிபுறக்கரை கிராமத்தில் கடந்த 4 நாட்களாக குடிநீர் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.

மலம் கசடு கழிவுநீர் சுத்திகரிப்பு ஆலைக்கான குழாய் பதிக்கும் பணிக்காக ஜேசிபி மூலம் தோண்டப்பட்டபோது, குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அப்பகுதி மக்களின் எதிர்ப்பால் பணிகள் பாதியில் நிறுத்தப்பட்ட நிலையில், உடைந்த குடிநீர் குழாய் இதுவரை சீரமைக்கப்படவில்லை என பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

குடிநீர் விநியோகத்தை உடனடியாக சீரமைத்து, பாதுகாக்கப்பட்ட குடிநீர் கிடைப்பதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கடற்கரைத் தெருவில் விளையாட்டு வீரர்கள் ஒருங்கிணைப்பு!

BEACH SPORTS ASSOCIATION (BSA) புதிய அமைப்பு உருவாக்கம்

அதிராம்பட்டினம், செப்.20:
அதிராம்பட்டினம் கடற்கரைத் தெரு ஜமாஅத் நிர்வாகம் மற்றும் தீனுல் இஸ்லாமிய இளைஞர்கள் நற்பணி மன்றம் சார்பில், கடற்கரைத் தெருவைச் சேர்ந்த விளையாட்டு வீரர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை (17-09-2026) மக்ரிப் தொழுகைக்குப் பிறகு கடற்கரைத் தெரு ஜமாஅத் நிர்வாக அலுவலகத்தில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் கடற்கரைத் தெருவைச் சேர்ந்த கால்பந்து, கிரிக்கெட், கைப்பந்து உள்ளிட்ட பல்வேறு விளையாட்டு அணிகளைச் சேர்ந்த வீரர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில், தெருவைச் சேர்ந்த அனைத்து விளையாட்டு வீரர்களையும் ஒருங்கிணைத்து, ஜமாஅத் நிர்வாகத்துடன் இணைந்து செயல்படுவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. மேலும், விளையாட்டு வீரர்களுக்கான அமைப்பிற்கு பெயர் சூட்டுவது தொடர்பாக ஆலோசனை நடைபெற்றது.

அதன் அடிப்படையில், புதிய அமைப்பிற்கு “BEACH SPORTS ASSOCIATION (BSA)” என பெயர் சூட்ட முடிவு செய்யப்பட்டது.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

1. கடற்கரைத் தெருவில் ஏதேனும் மரணம் நிகழ்ந்தால், ஜனாஸா அடக்கம் நடைபெறும் வரை எந்தவிதமான விளையாட்டு நடவடிக்கைகளும் நடைபெறக்கூடாது என தீர்மானிக்கப்பட்டது.

2. கடற்கரைத் தெருவின் முக்கியமான கூட்டங்கள் நடைபெறும் நாட்களில் விளையாட்டுப் போட்டிகள் நடத்தாமல், அனைத்து இளைஞர்களும் அந்தக் கூட்டங்களில் பங்கேற்க வேண்டும் என தீர்மானிக்கப்பட்டது.

இக்கூட்டத்தில் கடற்கரைத் தெரு ஜமாஅத் நிர்வாகிகள், தீனுல் இஸ்லாமிய இளைஞர்கள் நற்பணி மன்ற நிர்வாகிகள் மற்றும் கால்பந்து, கிரிக்கெட், கைப்பந்து உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுகளைச் சேர்ந்த வீரர்கள் கலந்து கொண்டனர்.
அதிராம்பட்டினம் நகராட்சியில் UPI வசதி இல்லையா?

வரிகளை செலுத்த மக்கள் படாதபாடு – டிஜிட்டல் பரிவர்த்தனைக்கு வசதி ஏற்படுத்த கோரிக்கை
அதிராம்பட்டினம் நகராட்சியில் பொதுமக்கள் செலுத்த வேண்டிய சொத்து வரி, குடிநீர் கட்டணம் உள்ளிட்ட பல்வேறு வரிகளை UPI மற்றும் பிற டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை முறைகள் மூலம் செலுத்துவதற்கான வசதி இல்லை என பொதுமக்கள் குற்றச்சாட்டு தெரிவித்து வருகின்றனர்.

தற்போதைய காலகட்டத்தில் பொதுமக்கள் பெருமளவில் UPI உள்ளிட்ட டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகளை பயன்படுத்தி வரும் நிலையில், நகராட்சி வரிகளை செலுத்துவதற்கு நேரடியாக அலுவலகத்திற்கு வந்து பணம் செலுத்த வேண்டிய நிலை இருப்பதாக கூறப்படுகிறது.

இதனால் பொதுமக்கள் நேரம் மற்றும் அலைச்சலுக்கு உள்ளாக வேண்டிய சூழல் ஏற்படுவதாகவும், நகராட்சி நிர்வாகம் டிஜிட்டல் கட்டண வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது.

மேலும், அரசு மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் டிஜிட்டல் பரிவர்த்தனையை ஊக்குவித்து வரும் நிலையில், நகராட்சியில் UPI வசதி ஏற்படுத்தப்படாதது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? என்ற கேள்வியும் பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

பொதுமக்களின் சிரமத்தை கருத்தில் கொண்டு, அதிராம்பட்டினம் நகராட்சியில் விரைவாக UPI மற்றும் பிற டிஜிட்டல் கட்டண வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
பாஜக மகளிருக்கு எதிரான கட்சி!
பெண்கள் சமூகம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என காங்கிரஸ் நிர்வாகி விமர்சனம்

பாஜக குறித்து கடுமையான விமர்சனத்தை முன்வைத்து காங்கிரஸ் கட்சியின் விவசாய அணியைச் சேர்ந்த அகில இந்திய பொதுச் செயலாளர் சேக்பரீது சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளன.

குஜராத்தில் நடைபெற்றதாகக் குறிப்பிடப்படும் ஒரு சம்பவத்தை சுட்டிக்காட்டி, பெண்களுக்கு எதிரான நடவடிக்கைகள் தொடர்பாக பாஜக மீது அவர் விமர்சனங்களை முன்வைத்துள்ளார்

மேலும், மணிப்பூரில் பெண்களை கற்பழித்து நிர்வாண ஊர்வலம் நடத்தியதாகக் கூறப்படும் சம்பவத்தையும் குறிப்பிட்டு, “பெண்கள் சமூகம் பாஜகவிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்” என அவர் வலியுறுத்தியதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடவடிக்கை எடுக்கப்படுமா?
பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதி அதிராம்பட்டினம் நகராட்சியில் பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் உள்ளூர் மேம்பாட்டு நிதியின் கீழ் ரூபாய் 10 லட்சம் மதிப்பீட்டில் ஷிஃபா மருத்துவமனை அருகில்  புதிய பயணிகள் நிழற்குடை திறந்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் தஞ்சை நாடாளுமன்ற உறுப்பினர் முரசொலி அவர்களும் தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளர் திரு.பழனிவேல் அவர்கள், பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் திரு.அண்ணாதுரை அவர்கள், அதிராம்பட்டினம் மேற்கு நகர செயலாளர் திரு. அஸ்ஸலாம்  அவர்கள், திமுக நிர்வாகிகளும் , தலைமை ஆசிரியர் மற்றும் கழக உடன்பிறப்புகள் கலந்து கொண்டனர்.
பாலியல் புகார் – கட்சி நடவடிக்கை

தமிழக பாஜக மாநில பொதுச் செயலாளர் கருப்பு எம். முருகானந்தம் மீது பாலியல் மற்றும் துன்புறுத்தல் தொடர்பான குற்றச்சாட்டுகளை முன்வைத்து, அக்கட்சியின் மாநில பிற்படுத்தப்பட்டோர் அணி செயலாளர் திவ்யா சேஷாத்ரி பாஜக மேலிடத்திடம் புகார் அளித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

புகாரில், கருப்பு முருகானந்தம் தன்னை உடல் மற்றும் மனரீதியாக துன்புறுத்தியதாகவும், திருமணம் செய்து கொள்வதாகக் கூறி உறவில் ஈடுபட்டதாகவும் திவ்யா சேஷாத்ரி குற்றம்சாட்டியுள்ளதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் செய்தி தெரிவிக்கிறது. மேலும், தேர்தலில் ஆதரவளிப்பதாக உறுதியளித்ததாகவும், கர்ப்பம் மற்றும் கட்டாயக் கருக்கலைப்பு தொடர்பாகவும் அவர் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளதாக கூறப்படுகிறது.

மேலும், தன்னையும் தனது குழந்தைகளையும் கொலை செய்வதாக மிரட்டியதாகவும் புகாரில் தெரிவித்துள்ளதாகவும், இதுதொடர்பாக மின்னணு ஆதாரங்கள் மற்றும் சாட்சிகளின் விவரங்கள் தன்னிடம் இருப்பதாகவும் திவ்யா சேஷாத்ரி கூறியதாக செய்தி வெளியாகியுள்ளது. விசாரணை நடைபெறும் வரை கருப்பு முருகானந்தத்தை இடைநீக்கம் செய்து, தமக்கு காவல் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் அவர் கோரியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில், பாஜக மாநில தலைவர் நைனார் நாகேந்திரன் கையெழுத்திட்டதாகக் கூறப்படும் 18.09.2026 தேதியிட்ட கடிதம் வெளியாகியுள்ளது. அதில், கட்சியின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டதாகக் கூறி, கருப்பு முருகானந்தம் கட்சிப் பொறுப்பிலிருந்து நீக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால், பாலியல் குற்றச்சாட்டு தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரைத் தொடர்ந்து கட்சி நிர்வாக ரீதியான நடவடிக்கையை மேற்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

எனினும், புகாரில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் விசாரணை அல்லது நீதிமன்றத் தீர்ப்பின் மூலம் நிரூபிக்கப்பட்டவை அல்ல என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். இதுகுறித்து கருப்பு முருகானந்தம், தனக்கு இந்தப் புகார் குறித்து எந்தத் தகவலும் இல்லை என்று தெரிவித்ததாகவும் செய்தி வெளியாகியுள்ளது

. BJP Tamilnadu Karuppu Muruganantham TN BJP General Secretary Nainar Nagenthran CPIM Tamilnadu <nis:link nis:type=tag nis:id=bjpnews nis:value=BJPNEWS nis:enabled=true nis:link/>
மக்களுக்கு வேண்டாம் என்ற திட்டத்தை திணிப்பதாக குற்றச்சாட்டு: மலம் கசடு கழிவு மேலாண்மை திட்டத்திற்கு 6 வார்டு மக்கள் எதிர்ப்பு

அதிராம்பட்டினம் நகராட்சியில் செயல்படுத்தப்பட உள்ளதாக கூறப்படும் மலம் கசடு கழிவு மேலாண்மை திட்டத்திற்கு எதிராக 6 வார்டுகளைச் சேர்ந்த பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

மக்களின் விருப்பத்திற்கு மாறாக திட்டத்தை நகராட்சி நிர்வாகம் திணிக்க முயற்சிப்பதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். குடியிருப்பு பகுதிகளின் அருகே இத்தகைய திட்டம் செயல்படுத்தப்படுவதால் ஏற்படக்கூடிய சுகாதார மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்புகள் குறித்து பொதுமக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

திட்டம் தொடர்பான முழுமையான தகவல்கள், அமைவிடம், செயல்பாட்டு முறைகள் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பு குறித்த விளக்கங்களை நகராட்சி நிர்வாகம் வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மக்களின் எதிர்ப்பையும், அவர்களின் கருத்துகளையும் கருத்தில் கொண்டு திட்டத்தை மறுபரிசீலனை செய்ய நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா என்பது பொதுமக்கள் மத்தியில் கேள்வியாக எழுந்துள்ளது.
அதிராம்பட்டினத்தில் ஆவின் பால் தட்டுப்பாடு: தனியார் பால் நிறுவனங்களின் கொள்ளை லாபத்திற்கு துணை போகிறதா ஆவின் நிறுவனம்?

தினசரி வாடிக்கையாளர்களுக்கு பால் கிடைப்பதில் சிக்கல் – பொதுமக்கள் அதிருப்தி
அதிராம்பட்டினம் பகுதியில் கடந்த சில நாட்களாக ஆவின் பால் தட்டுப்பாடு நிலவி வருவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். குறிப்பாக, தினசரி பால் வாங்கும் சில்லறை வாடிக்கையாளர்களுக்கு போதுமான அளவு பால் கிடைப்பதில்லை என தெரிவிக்கப்படுகிறது.

காலை நேரங்களில் ஆவின் பால் விற்பனை நிலையங்களை நாடும் பொதுமக்கள், பால் இருப்பு இல்லை அல்லது குறைந்த அளவே கிடைக்கிறது என்ற பதிலை எதிர்கொள்வதாக கூறுகின்றனர். இதனால் தினசரி பயன்பாட்டிற்காக ஆவின் பாலை நம்பியுள்ள ஏழை மற்றும் நடுத்தர குடும்பங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

தட்டுப்பாடு காரணமாக பொதுமக்கள் அதிக விலை கொடுத்து தனியார் பால் நிறுவனங்களின் பொருட்களை வாங்க வேண்டிய நிலை ஏற்படுவதாகவும், இது தனியார் நிறுவனங்களின் விற்பனை மற்றும் லாபத்திற்கு சாதகமாக அமைகிறதா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

அரசின் கட்டுப்பாட்டில் செயல்படும் ஆவின் நிறுவனம், பொதுமக்களுக்கு மலிவு விலையில் தரமான பால் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டிய பொறுப்பு கொண்டது. எனவே, அதிராம்பட்டினம் பகுதியில் நிலவும் பால் தட்டுப்பாட்டை உடனடியாக சரிசெய்து, சில்லறை வாடிக்கையாளர்களுக்கும் போதுமான அளவு பால் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஏழை மற்றும் நடுத்தர மக்களின் அத்தியாவசிய தேவையை கருத்தில் கொண்டு, ஆவின் நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்குமா? என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
AL பள்ளி நிர்வாகத்தின் விளக்கம்

எமது பள்ளியைப் பற்றி பரவி வரும் வதந்திகளை யாரும் நம்பவோ, பகிரவோ வேண்டாம்.

பள்ளிக்குள் வந்த பெண்மணியை ஆசிரியர்கள் தடுத்து நிறுத்தி உரிய முறையில் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், அவர் குறிப்பிடப்பட்ட மாணவியின் பெயரைக் கூறி, அந்த மாணவியின் வீட்டிலிருந்து ஒரு பொருளை வாங்கி வருமாறு அவரது தாயார் கூறியதாக தெரிவித்தார். அவர் குழந்தையைக் கடத்தும் நோக்கத்துடன் பள்ளிக்குள் வரவில்லை என்பதும், அவரது கையில் இருந்த குழந்தை அவரது சொந்தக் குழந்தை என்பதும் விசாரணையில் தெரியவந்தது.

எந்தவித அசம்பாவிதமும் நடைபெறவில்லை. பள்ளி நிர்வாகம் பொறுப்புடன் செயல்பட்டு, விசாரணைக்குப் பின்னர் அந்தப் பெண்மணியை பள்ளி வளாகத்திலிருந்து வெளியே அனுப்பியது.

அந்தப் பெண்மணி யார், மாணவர்களின் பெற்றோருக்கு அவர் தெரிந்தவரா என்பதை அடையாளம் காணும் நோக்கிலேயே அவரது புகைப்படம் பகிரப்பட்டது.

எனவே, உறுதிப்படுத்தப்படாத தகவல்களை நம்பவோ, பகிரவோ வேண்டாம். உண்மையான தகவல்களை மட்டுமே கருத்தில் கொண்டு, பள்ளி நிர்வாகத்துடன் அனைவரும் ஒத்துழைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

AL பள்ளி நிர்வாகம்
அதிராம்பட்டினம்.
தள்ளியதை அள்ள தயக்கம் ஏன்?
நகராட்சிக்கு அதிரை மக்கள் கேள்வி !

அதிராம்பட்டினம் ஆனைவிழுந்தான் குளத்தை சீரமைக்கும் பணி தீவிரம் – குவிந்துள்ள குப்பைகளை அகற்ற நகராட்சி நிர்வாகம் மெத்தனம் காட்டுவதாக குற்றச்சாட்டு

அதிராம்பட்டினம் ஆனைவிழுந்தான் குளத்தை சீரமைக்கும் பணியில் தனியார் தொண்டு நிறுவனம் ஒன்று களமிறங்கி, பணிகளை மும்முரமாக மேற்கொண்டு வருகிறது.

குளத்தின் கரையை கட்டமைக்கும் பணிக்காக JCB இயந்திரம் மூலம் மண் வாரியபோது, குளத்திற்குள் அதிகளவில் குப்பைகள் குவிந்து கிடப்பது தெரியவந்துள்ளது. இதில் 99.9 சதவீத குப்பைகள் நகராட்சி ஊழியர்களால் குளத்திற்குள் தள்ளப்பட்டதாக அப்பகுதியினர் குற்றம்சாட்டுகின்றனர்.

இந்நிலையில், குளத்தின் தூர்வாரும் பணிகள் விரைவில் தொடங்க உள்ளதாக கூறப்படும் நிலையில், தற்போது வாரி எடுக்கப்பட்டுள்ள குப்பைகளை அகற்ற நகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்காமல் மெத்தனம் காட்டுவதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

குப்பைகள் அகற்றப்படாமல் குவிந்து கிடப்பதால் அருகிலுள்ள அரசு மருத்துவமனை வளாகம் மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளில் துர்நாற்றம் வீசுவதுடன், கொசுத்தொல்லையும் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

குளத்தை சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், குளத்திலிருந்து அகற்றப்படும் குப்பைகளை உடனடியாக அப்புறப்படுத்தி, சுகாதாரமான சூழலை உருவாக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
AI-யில் ஒரு படம் (Image) அல்லது வீடியோவை உருவாக்குவதற்கு நேரடியாகத் தண்ணீர் தேவையில்லை. ஆனால், அதைச் செய்து முடிக்கும் தரவு மையங்களை (Data Centers) மற்றும் பிராசஸர்களைக் (GPUs) குளிர்விக்க பெருமளவு தண்ணீர் தேவைப்படுகிறது.
​தரவு மையத்தின் பராமரிப்பு மற்றும் மின்சார உற்பத்திக்கான நீர் பயன்பாட்டைச் சேர்த்து, கணக்கிடப்பட்ட சராசரி விவரங்கள்:
​ஒரு AI படம் (AI Image): 0.5 லிட்டர் முதல் 1.5 லிட்டர் வரை (சுமார் 2 முதல் 6 கிளாஸ் தண்ணீர்).
​ஒரு குறுகிய AI வீடியோ (AI Video): 10 லிட்டர் முதல் 30 லிட்டர் வரை (வீடியோவின் நீளம் மற்றும் Resolution-ஐப் பொறுத்து மாறுபடும்).
​ஏன் இவ்வளவு தண்ணீர் தேவைப்படுகிறது?
​நேரடி குளிர்விப்பு (Direct Cooling): AI மாடல்களை இயக்கும் உயர்தர கணினிகள் (GPUs) அதிக வெப்பமடைவதால், அவற்றைக் குளிர்விக்கச் ஆவியாக்கல் குளிரூட்டும் அமைப்புகள் (Evaporative Cooling) மூலம் தண்ணீர் பயன்படுத்தப்படுகிறது.
​மறைமுகப் பயன்பாடு (Indirect Energy): AI நெட்வொர்க்குகளுக்குத் தேவையான அதிகப்படியான மின்சாரத்தை உற்பத்தி செய்யும் நிலக்கரி அல்லது அணுமின் நிலையங்களிலும் பெருமளவு தண்ணீர் பயன்படுகிறது.
​உதாரணத்திற்கு, ஒரு AI வீடியோவை உருவாக்குவது என்பது பல நூறு உயர் தெளிவுத்திறன் கொண்ட படங்களை ஒரே நேரத்தில் உருவாக்கித் தைப்பதற்குச் சமம் என்பதால், படங்களை விட வீடியோவிற்கு மிக அதிகமான ஆற்றலும் தண்ணீரும் தேவைப்படுகின்றன.