விழுப்புரம் இந்திரா நகர் ரயில்வே கேட் பகுதியில் மேம்பாலம் அமைக்கப்படுமா? பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் எதிர்பார்ப்பு!
விழுப்புரம் – திருக்கோவிலூர் மெயின் ரோட்டில் அமைந்துள்ள இந்திரா நகர் ரயில்வே கேட் பகுதியில் நிலவும் கடுமையான போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க, உடனடியாக மேம்பாலம் அமைக்க வேண்டும் எனப் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
.
அடிக்கடி ரயில்வே கேட் மூடப்படுவதால், சாலையின் இருபுறமும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நிற்கின்றன. இதனால் அவசர சிகிச்சைக்காகச் செல்லும் ஆம்புலன்ஸ்கள், பள்ளி-கல்லூரி வாகனங்கள் மற்றும் பொதுமக்கள் மணிக்கணக்கில் காத்திருந்து பெரும் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.
#Villupuram #NewsUpdates #TrafficIssue #IndiraNagar #Railways #PublicDemand