சுதந்திர தின விழாவில் கண்கலங்க வைத்த மல்லர் கம்பம்!
*விழுப்புரம் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் சுதந்திர தின விழா கோலாகலம்!
சுதந்திர தின விழாவையொட்டி விழுப்புரம் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் **தேசியக் கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினார்.**
இதனைத் தொடர்ந்து நடைபெற்ற **பாரம்பரிய விளையாட்டான மல்லர் கம்பம்** அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.
மாற்றுத்திறனாளிகளையும் இணைத்து அரசு பள்ளி மாணவர்கள் நடத்திய மல்லர் கம்பம் நிகழ்ச்சி, பார்வையாளர்களை வியப்பிலும் நெகிழ்ச்சியிலும் ஆழ்த்தியது.
தன்னம்பிக்கை, விடாமுயற்சி, திறமை ஆகியவற்றை வெளிப்படுத்திய இந்த நிகழ்ச்சி, சுதந்திர தின விழாவில் பலரையும் **கண்கலங்க வைத்த நெகிழ்ச்சியான தருணமாக** அமைந்தது.
**உண்மையிலேயே இது “மல்லர் கம்பம்” அல்ல… மனதைத் தொட்ட “மலர் கம்பம்!”
#சுதந்திரதினம் #விழுப்புரம் #மல்லர்கம்பம் #தமிழர்பாரம்பரியம் #TN32NEWS