Install App
Login
HOME
Delhi
Haryana
Uttar Pradesh
Bihar
Chhattisgarh
Madhya Pradesh
Rajasthan
Jharkhand
Himachal Pradesh
Uttarakhand
Punjab
Andhra Pradesh
Telangana
Tamil Nadu
Karnataka
Maharashtra
Assam
West Bengal
Tripura
Gujarat
Odisha
Kerala
Jansamasya
News
पुलिस
Bjp
National
Police
Bihar
India
कांग्रेस
बीजेपी
Gujarat
Congress
Modi
Delhi
Viral
मारपीट
Crime
Jharkhand
Dm
Up
Bollywood
Breakingnews
Narendramodi
Madhya_pradesh
उत्तरप्रदेश
Pmmodi
Rahulgandhi
यूपी
कानपुर
Uttarpradesh
malarsakthi520
விழுப்புரம்: விழுப்புரத்தில் ஆட்சியர் காந்தியடிகள் சிலைக்கு மரியாதை செலுத்தினர் - 15 ஆகஸ்ட் 2026
Viluppuram, Viluppuram
| Aug 15, 2026
விழுப்புரம் நகராட்சி கிழக்கு பாண்டி சாலையில் உள்ள காந்தியடிகள் திருவுருவச் சிலைக்கு 15 ஆகஸ்ட் 2026 அன்று மாவட்ட ஆட்சியர் திரு.ஷேக் அப்துல் ரஹ்மான் மலர் மாலையால் மரியாதை செலுத்தி ஆச்சரித்து சிறப்பித்த நிகழ்வு ஏற்பட்டது.
MORE NEWS
#விழுப்புரத்தில் தனியார் பேருந்து ஓட்டுநர்கள் மீது 10 பேர் கொண்ட கும்பல் தாக்குதல்# விழுப்புரம் அருகே சிந்தாமணி பகுதியில் ஈரோட்டில் இருந்து சென்னை நோக்கி சென்ற தனியார் பேருந்து ஓட்டுநர் மாதேஸ்வரன் மற்றும் உதவியாளர் மனோஜ்குமார் ஆகியோரை, இருசக்கர வாகனத்தில் வந்த சுமார் 10 பேர் கொண்ட கும்பல் வழிவிடுவது தொடர்பான தகராறில் தாக்கியதாக கூறப்படுகிறது. 🪨 நடுரோட்டில் கற்களால் தாக்கப்பட்டதில் இருவரும் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனை கண்டித்து தனியார் பேருந்து ஓட்டுநர்கள் பேருந்துகளை நிறுத்தி **சாலை மறியலில் ஈடுபட்டனர்.** இதனால் திருச்சி–சென்னை புறவழிச்சாலையில் சுமார் **1 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு** ஏற்பட்டது. தகவலறிந்து வந்த போலீசார், தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததை தொடர்ந்து மறியல் கைவிடப்பட்டு போக்குவரத்து சீரானது. 📹 **தற்போது ஓட்டுநர் தாக்கப்படும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.** ⚠️ இதேபோல், ஒரு மாதத்திற்கு முன்பு இருவேல்பட்டு பகுதியில் தனியார் பேருந்து ஓட்டுநர் 3 பேரால் தாக்கப்பட்ட சம்பவமும் நடைபெற்றதாக கூறப்படுகிறது. **தனியார் பேருந்து ஓட்டுநர்களுக்கு பாதுகாப்பு வழங்கப்படுமா?** #விழுப்புரம் #Villupuram #PrivateBus #BusDriver #CCTV #RoadRokko #Traffic #VillupuramNews #TN32NEWS #TN32News
Viluppuram, Viluppuram | Aug 16, 2026
🚨 விழுப்புரம் இந்திரா நகரில் பரபரப்பு! வக்கீல் காளிதாஸ் புதிதாக கட்டி வரும் வீட்டின் முன்பு பெட்ரோல் குண்டு வீச்சு! வீட்டின் முன்பு பெட்ரோல் குண்டு வீசப்பட்டதாக கூறப்படும் சம்பவத்தால் இந்திரா நகர் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்த விழுப்புரம் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். பெட்ரோல் குண்டு வீசியது யார்? காரணம் என்ன? என்பது குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். 🔴 மேலும் தகவல்கள் விசாரணைக்கு பின்னர் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. #Villupuram #VillupuramNews #இந்திராநகர் #விழுப்புரம் #PetrolBomb #PoliceInvestigation #TN32NEWS
Viluppuram, Viluppuram | Aug 16, 2026
பனையபுரம் ஏரி வரத்து வாய்க்கால் தூர்வாரி பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வந்த த.வெ.க. மாவட்ட செயலாளர் விஜய் வடிவேல். விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட முண்டியம்பாக்கம் அருகே உள்ள பனையபுரம் ஏரி வரத்து வாய்க்கால் நீண்டகாலமாக தூர்வாரப்படாமல் புதர்மண்டி கிடந்த நிலையில், பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று தமிழக வெற்றிக் கழகத்தின் விழுப்புரம் தென்மேற்கு மாவட்ட செயலாளர் விஜய் வடிவேல் தனது முயற்சியில் வாய்க்காலை தூர்வாரி சீரமைத்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்துள்ளார்... விக்கிரவாண்டி #முண்டியம்பாக்கம் #பனையபுரம்
Viluppuram, Viluppuram | Aug 16, 2026
சுதந்திர தின விழாவில் கண்கலங்க வைத்த மல்லர் கம்பம்! *விழுப்புரம் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் சுதந்திர தின விழா கோலாகலம்! சுதந்திர தின விழாவையொட்டி விழுப்புரம் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் **தேசியக் கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினார்.** இதனைத் தொடர்ந்து நடைபெற்ற **பாரம்பரிய விளையாட்டான மல்லர் கம்பம்** அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. மாற்றுத்திறனாளிகளையும் இணைத்து அரசு பள்ளி மாணவர்கள் நடத்திய மல்லர் கம்பம் நிகழ்ச்சி, பார்வையாளர்களை வியப்பிலும் நெகிழ்ச்சியிலும் ஆழ்த்தியது. தன்னம்பிக்கை, விடாமுயற்சி, திறமை ஆகியவற்றை வெளிப்படுத்திய இந்த நிகழ்ச்சி, சுதந்திர தின விழாவில் பலரையும் **கண்கலங்க வைத்த நெகிழ்ச்சியான தருணமாக** அமைந்தது. **உண்மையிலேயே இது “மல்லர் கம்பம்” அல்ல… மனதைத் தொட்ட “மலர் கம்பம்!” #சுதந்திரதினம் #விழுப்புரம் #மல்லர்கம்பம் #தமிழர்பாரம்பரியம் #TN32NEWS
Viluppuram, Viluppuram | Aug 15, 2026
Viluppuram, Viluppuram | Aug 15, 2026