
**விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் 8 வயது பேத்தியுடன் மூதாட்டி மனு! | நிவாரண நிதி வழங்க கோரிக்கை**
விக்கிரவாண்டி தாலுகா நல்லாப்பாளையம் பள்ளிக்கூடம் தெருவை சேர்ந்த முருகன்–சின்னப்பொன்னு தம்பதியினர், தங்களது 8 வயது பேத்தி புவனாவை அழைத்துக்கொண்டு விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர்.
அந்த மனுவில், தங்களது மகள் சத்யா புதுச்சேரி அருகே உள்ள செல்லிப்பட்டு கிராமத்தில் திருமணம் செய்து வைக்கப்பட்டதாகவும், அவரது கணவர் ஸ்ரீதர் 3 ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்ததாகவும் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து சத்யா தனது குழந்தைகள் ஹரிகரன் (11), புவனா (8) ஆகியோருடன் திருக்கோவிலூர் அருகே மணம்பூண்டியில் வசித்து வந்ததாக கூறியுள்ளனர்.
கடந்த **03.10.2024 அன்று கோட்டமருதூர் ஏரியில் விளையாட சென்ற ஹரிகரன், நீரில் மூழ்கி உயிரிழந்ததாகவும்**, அதன்பின்னர் **06.12.2024 அன்று சத்யா கொலை செய்யப்பட்டதாகவும்** மனுவில் தெரிவித்துள்ளனர்.
தற்போது 8 வயது புவனா தங்களது அரவணைப்பில் வளர்ந்து வருவதாகவும், பேத்திக்கு அரசு சார்பில் வழங்கக்கூடிய உதவிகளை வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும், ஹரிகரன் உயிரிழந்து 1½ ஆண்டுகளுக்கு மேலாகியும் இதுவரை நிவாரண நிதி கிடைக்கவில்லை என தெரிவித்துள்ள அவர்கள், **நிவாரண நிதியையும், பேத்தி புவனாவுக்கு தேவையான உதவித்தொகையையும் வழங்க வேண்டும்** என கோரிக்கை விடுத்துள்ளனர்.
**TN32NEWS – விழுப்புரம் மாவட்ட செய்திகள் உடனுக்குடன்!**
#TN32NEWS #விழுப்புரம் #Villupuram #விக்கிரவாண்டி #Vikravandi #CollectorOffice #கலெக்டர்_அலுவலகம் #நிவாரணநிதி #கோரிக்கைமனு #தமிழ்நாடு #TamilNews #VillupuramNews #BreakingNews