விழுப்புரம் ஜெயேந்திர சரஸ்வதி மெட்ரிக் பள்ளியில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு
விழுப்புரம் ஜெயேந்திர சரஸ்வதி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் போதைப்பொருள் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் கலந்து கொண்டு, போதைப்பொருட்களுக்கு எதிராக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் உறுதிமொழி ஏற்றனர்.
போதைப்பொருட்களால் ஏற்படும் பாதிப்புகள், மாணவர்களின் எதிர்காலத்தில் அதன் தாக்கம் மற்றும் போதைப்பழக்கத்தைத் தடுப்பதன் அவசியம் குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
நிகழ்ச்சியில் பள்ளி நிர்வாகிகள், ஆசிரியர்கள் மற்றும் மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.