
🕉️ தென்பெண்ணை ஆற்றில் சோழர்கால சிவலிங்கம்?
விழுப்புரம் அருகே ஆற்றங்கரையில் உருளை வடிவிலான சிவலிங்கத்தின் ருத்ர பாகம் கண்டெடுப்பு!
விழுப்புரம் மாவட்டம் வளவனூர் அருகேயுள்ள எஸ்.மேட்டுப்பாளையம் கிராமத்தில் தென்பெண்ணை ஆற்றங்கரையோரம் கிரிக்கெட் விளையாட சென்ற இளைஞர்கள், ஆற்று நீரில் அடித்து வரப்பட்டிருந்த உருளை வடிவிலான கல் பகுதியை கண்டெடுத்தனர்.
அது சிவலிங்கத்தின் ருத்ர பாகம் என தெரியவந்ததையடுத்து, இளைஞர்கள் அதனை மீட்டு கரையோரத்தில் உள்ள சிவன் கோவில் அருகே வைத்துள்ளனர்.
தென்பெண்ணை ஆற்றங்கரை பகுதிகளில் சோழர் காலத்திலிருந்தே சிவலிங்க வழிபாடு நடைபெற்று வந்ததாக கூறப்படும் நிலையில், தற்போது கிடைத்துள்ள இந்த சிவலிங்கத்தின் ருத்ர பாகம் சோழர் காலத்தைச் சேர்ந்ததாக இருக்கலாம் என வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும், சிவலிங்கத்தில் இடம்பெறும் விஷ்ணு பாகம் மற்றும் ஆவுடையார் பாகம் இதுவரை கிடைக்கவில்லை. அவற்றையும் தேடி கண்டறிந்து, சிவலிங்கத்தை முறையாக அமைத்து வழிபாடு செய்ய கிராம மக்கள் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
📍 எஸ்.மேட்டுப்பாளையம் | விழுப்புரம்
#விழுப்புரம் #எஸ்மேட்டுப்பாளையம் #தென்பெண்ணையாறு #சிவலிங்கம் #சோழர்காலம் #வரலாறு #தொல்லியல் #TN32NEWS #VillupuramNews #TamilNews