நாகாத்தம்மன் சிலை இரவோடு இரவாக அகற்றம் – ஜானகிபுரத்தில் பரபரப்பு
விழுப்புரம்:
விழுப்புரம் அருகே உள்ள ஜானகிபுரம் கிராமத்தில் பொதுமக்களால் வழிபட்டு வந்த நாகாத்தம்மன் சிலை, இரவோடு இரவாக மர்மநபர்களால் அகற்றப்பட்டதாக கூறப்படுகிறது.
கிராமத்தின் பொதுவான இடத்தில் வைக்கப்பட்டிருந்த நாகாத்தம்மன் சிலை திடீரென காணாமல் போனதால், அப்பகுதி மக்கள் அதிர்ச்சியும் அச்சமும் அடைந்துள்ளனர்.
சிலையை யார் அகற்றியது? எதற்காக அகற்றப்பட்டது? என கிராம மக்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
சம்பவம் குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர், சிலை அகற்றப்பட்ட சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சிலையை அகற்றியவர்கள் யார் என்பது குறித்து விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இதனிடையே, ஜானகிபுரம் பகுதியில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருவதால், காவல்துறையினர் பாதுகாப்பு நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.