கோவை வடக்கு: கோவை அவிநாசி சாலை: நடுரோட்டில் தீப்பற்றி எரிந்த கார் - குடும்பத்தினர் உயிர் தப்பினர்!
கோவை கே.எம்.சி.எச் மருத்துவமனை அருகே கார் தீப்பற்றி எரிந்ததில் கார் முழுமையாகச் சேதமடைந்தது. காரில் இருந்த குடும்பத்தினர் அனைவரும் பாதுகாப்பாக வெளியேறியதால் பெரும் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது. மின்கசிவு காரணமா என்பது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.