வாணியம்பாடி: தேவி வெங்கடாசலம் பள்ளியில் ஆசிரியர்களுக்கு 'குரு ரத்னா 2026' விருது
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த சின்னகல்லுப்பள்ளியில் உள்ள தேவி வெங்கடாசலம் பொதுப் பள்ளியில், ஆசிரியர்கள் தினத்தை முன்னிட்டு சிறந்த ஆசிரியர்களுக்கு 'குரு ரத்னா 2026' விருதுகள் வழங்கப்பட்டன. பேராசிரியர் டாக்டர் ரத்னா நடராஜன் கலந்துகொண்டு ஆசிரியர்களை கௌரவித்தார்.