நாகப்பட்டினம்: நாகப்பட்டினத்தில் 23 கிலோ கஞ்சா பறிமுதல்: 3 பேர் கைது
நாகப்பட்டினம் பாப்பாக்கோவில் பேருந்து நிறுத்தம் அருகே விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 23 கிலோ கஞ்சாவை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு 11.5 லட்சம் ரூபாய். இது தொடர்பாக 3 பேரை கைது செய்து, அவர்களிடம் இருந்த செல்போன்களையும் பறிமுதல் செய்துள்ளனர்.