கீழ்வேளூர்: நாகையில் குடிநீர் கோரி சாலை மறியல்: திருத்துறைப்பூண்டி - வேளாங்கண்ணி சாலையில் போக்குவரத்து பாதிப்பு
நாகை மாவட்டம் மகிழி கிராமத்தில் 2 மாதங்களாக குடிநீர் வராததால், பொதுமக்கள் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். திருத்துறைப்பூண்டி - வேளாங்கண்ணி சாலையில் நடந்த இந்த போராட்டத்தால் போக்குவரத்து ஒரு மணி நேரம் பாதிக்கப்பட்டது. அதிகாரிகளின் பேச்சுவார்த்தைக்கு பின் போராட்டம் கைவிடப்பட்டது.