தருமபுரி: பாலக்கோடு அருகே சிறுத்தை நடமாட்டம்: 16 கிராம மக்கள் உஷார் - வனத்துறை எச்சரிக்கை
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே சிறுத்தை நடமாட்டம் உறுதி செய்யப்பட்டுள்ளது. 16க்கும் மேற்பட்ட கிராம மக்கள் இரவு நேரங்களில் வெளியே செல்வதை தவிர்க்கவும், தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் வனத்துறை அறிவுறுத்தியுள்ளது. சிசிடிவி காட்சிகள் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.