தருமபுரி: அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு 1 கிராம் தங்க மோதிரம் வழங்கும் திட்டம் தொடக்கம்
தருமபுரி அரசு மருத்துவமனையில் பிறக்கும் அனைத்துக் குழந்தைகளுக்கும் 1 கிராம் தங்க மோதிரம் வழங்கும் திட்டத்தை மாவட்ட ஆட்சியர் திரு.வே.சரவணன் தொடங்கி வைத்தார். அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் உயர் அதிகாரிகள் மற்றும் மருத்துவர்கள் பலர் கலந்துகொண்டனர்.