பெரம்பலூர்: அக்டோபர் 2 காந்தி ஜெயந்தி அன்று டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை!
காந்தி ஜெயந்தியை முன்னிட்டு அக்டோபர் 2, 2026 அன்று பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுபான கடைகள், மதுக்கூடங்கள் மற்றும் FL3 உரிமம் பெற்ற தனியார் மதுபான கூடங்கள் அனைத்தும் ஒரு நாள் விடுமுறை விடப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.