சேலம் தெற்கு: சேலத்தில் 300 கோடி ரூபாய் மோசடி: ஜெப கூடத்தை அடித்து நொறுக்கிய பாதிக்கப்பட்ட மக்கள்
சேலம் அம்மாபேட்டையில் 300 கோடி ரூபாய் மோசடி செய்ததாக எழுந்த புகாரில், 12 நாட்களாக போராடி வரும் மக்கள் இன்று ஜெப கூடத்திலுள்ள பொருட்களை அடித்து நொறுக்கினர். பாதிரியார் செந்தில்குமார் உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி போராட்டம் தொடர்ந்து வருகிறது.