குடியாத்தம்: வேலூர்: மின்கம்பத்தை கயிறு கட்டி வைத்த மின்வாரியம் - அச்சத்தில் பொதுமக்கள்!
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே சாய்ந்த நிலையில் உள்ள மின்கம்பத்தை, நிரந்தரமாக சரிசெய்யாமல் கயிறு மூலம் மரத்தில் கட்டி வைத்துள்ள மின்வாரிய அதிகாரிகளால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். கனமழை மற்றும் காற்றால் அசம்பாவிதங்கள் ஏற்படும் முன் மின்கம்பத்தை சீரமைக்க கோரிக்கை எழுந்துள்ளது.