செங்கல்பட்டு: மீனவர்களுக்கு குட் நியூஸ்: 90 கி.மீ பயணம் இனி இல்லை - தென்பட்டினத்தில் புதிய டீசல் பங்க்
செங்கல்பட்டு மீனவர்கள் மானிய விலை டீசல் பெற இனி 90 கி.மீ பயணிக்க வேண்டாம். மாமல்லபுரம் அருகே தென்பட்டினத்தில் புதிய பங்க் அமைக்கும் பணியை மீன்வளத்துறை தொடங்கியுள்ளது. 6 மாதங்களில் பயன்பாட்டிற்கு வரும் இந்த பங்க் மூலம் மீனவர்கள் 14 கி.மீ தூரத்திலேயே டீசல் பெறலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.