தருமபுரி: தருமபுரியில் 200-க்கும் மேற்பட்ட ஓய்வூதியர்கள் தர்ணா போராட்டம்
தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஓய்வூதியர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர்கள் சங்கம் சார்பில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் 200-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.