உத்தமபாளையம்: தேனி எல்லை: ரேஷன் அரிசி, யூரியா கடத்தலைத் தடுக்க தமிழக-கேரள அதிகாரிகள் அதிரடி திட்டம்
தேனி மாவட்டம் வழியாக கேரளாவுக்கு ரேஷன் அரிசி மற்றும் யூரியா கடத்தப்படுவதைத் தடுக்க கம்பத்தில் தமிழக-கேரள அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர். சோதனை சாவடிகளில் சோதனையை தீவிரப்படுத்துவது மற்றும் குற்றவாளிகள் தகவலைப் பரிமாறிக்கொள்வது குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.