காரியமங்கலம்: மாரண்டஅள்ளியில் கஞ்சா விற்பனை: சிறுவர்கள் உட்பட 5 பேர் கைது
தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளியில் கஞ்சா விற்பனை செய்ததாக 2 இளைஞர்கள் மற்றும் 3 சிறுவர்கள் என 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இவர்களிடமிருந்து 110 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது குறித்து மாரண்டஅள்ளி போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.