கீழ்வேளூர்: நாகை: கொள்ளிடம் குடிநீர் குழாயில் பயங்கர உடைப்பு - பல லட்சம் லிட்டர் தண்ணீர் வீண்
நாகை மாவட்டம் ஓர்குடி அருகே கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் திட்ட குழாய் உடைந்து தண்ணீர் வீணாகி வருகிறது. கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவும் நிலையில், போர்க்கால அடிப்படையில் குழாயைச் சரிசெய்ய அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.