திருநெல்வேலி: நெல்லை: போலி பதிவு எண் கொண்ட காரில் 624 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்
நெல்லை பேட்டையில் போலி பதிவு எண் கொண்ட காரில் கடத்தப்பட்ட 624 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக ராஜஸ்தானை சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் இருவரை போலீசார் தேடி வருகின்றனர்.