பெரம்பலூர்: எம்பி அருண் நேரு, திருமாவளவன் தலைமையில் வளர்ச்சி பணிகள் குறித்த ஆய்வு கூட்டம்
பெரம்பலூர் ஆட்சியர் அலுவலகத்தில், எம்பி அருண் நேரு மற்றும் திருமாவளவன் தலைமையில் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழுக்கூட்டம் நடைபெற்றது. இதில் மத்திய அரசின் பல்வேறு திட்டங்களின் செயல்பாடுகள் மற்றும் வளர்ச்சி பணிகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.