திருநெல்வேலி: நெல்லை: முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு வீடு தேடி வரும் ரேஷன் பொருட்கள்
நெல்லை மாவட்டத்தில் 65 வயதிற்கு மேற்பட்ட முதியவர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு, அக்டோபர் 3 மற்றும் 5 ஆகிய தேதிகளில் ரேஷன் கடை விற்பனையாளர்கள் மூலம் வீட்டிற்கே சென்று பொருட்கள் வினியோகம் செய்யப்பட உள்ளது. இத்திட்டத்தைப் பயனாளிகள் பயன்படுத்திக்கொள்ள மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.