நாகப்பட்டினம்: நாகப்பட்டினத்தில் 8 கோடி ரூபாய் மதிப்புள்ள கடல் அட்டைகள் பறிமுதல்: ஒருவர் கைது
நாகப்பட்டினத்தில் வெளிநாடுகளுக்கு கடத்த முயன்ற 418 கிலோ தடை செய்யப்பட்ட கடல் அட்டைகளை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர். 8 கோடி ரூபாய் மதிப்பிலான கடல் அட்டைகளுடன் செல்வம் என்ற நபர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.