பேரணாம்பட்டு: வேலூர்: வனப்பகுதியில் நாட்டு துப்பாக்கிகளுடன் முயல் வேட்டை - 3 பேர் கைது
வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு வனப்பகுதியில் நாட்டு துப்பாக்கியுடன் முயல் வேட்டையில் ஈடுபட்ட 3 பேரை வனத்துறையினர் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 2 துப்பாக்கிகள் மற்றும் வேட்டையாடப்பட்ட முயல்கள் பறிமுதல் செய்யப்பட்டன.