பரமத்தி வேலூர்: நாமக்கல்: பரமத்தி வேலூரில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு - விதைப்பந்துகள் தயாரிப்பு தொடக்கம்
நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் மதுபாலன் அவர்கள் பரமத்தி வேலூர் பகுதியில் வளர்ச்சித் திட்டப் பணிகளை ஆய்வு செய்தார். வேலூர் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற நாட்டு நலப்பணித் திட்ட நிகழ்வில் கலந்துகொண்டு, 200-க்கும் மேற்பட்ட மாணவர்களுடன் இணைந்து விதைப்பந்துகள் தயாரிக்கும் பணியைத் தொடங்கி வைத்தார்.