அரியலூர்: 250 கர்ப்பிணித் தாய்மார்களுக்கு சீர்வரிசை வழங்கி வளைகாப்பு விழா கொண்டாட்டம்
அரியலூரில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் நடைபெற்ற சமுதாய வளைகாப்பு விழாவில், 250 கர்ப்பிணித் தாய்மார்களுக்கு மாவட்ட ஆட்சியர் திருமதி. ந. மிருணாளினி அவர்கள் சீர்வரிசைப் பொருட்களை வழங்கினார்.