பெரியகுளம்: தேவதானப்பட்டியில் குடிநீர் கேட்டு பெண்கள் போராட்டம்: பேரூராட்சி அலுவலகம் முற்றுகை
தேனி மாவட்டம் தேவதானப்பட்டி பேரூராட்சியில் 20 நாட்களாகக் குடிநீர் வழங்கப்படாததால், காலி குடங்களுடன் பெண்கள் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி குடிநீர் விநியோகத்தைச் சீரமைப்பதாக உறுதியளித்ததை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.