கீழ்வேளூர்: நாகையில் கோலாகலமாக நிறைவடைந்த காத்தாடி திருவிழா: போதை ஒழிப்பு விழிப்புணர்வு!
நாகப்பட்டினம் காமேஸ்வரம் கடற்கரையில் நடைபெற்ற 3 நாள் காத்தாடி திருவிழா இன்றுடன் நிறைவடைந்தது. போதைப்பொருள் ஒழிப்பை மையமாக வைத்து நடத்தப்பட்ட இந்த விழாவில் அமைச்சர் ஏ.எம்.ஷாஜஹான் மற்றும் மாவட்ட ஆட்சியர் பிரவீன் குமார் ஆகியோர் பங்கேற்றனர். பாய்மரப் படகுப் போட்டியில் வென்ற மாணவர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.