பேரணாம்பட்டு: வேலூர்: பேரணாம்பட்டில் மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி பள்ளிவாசலை பார்வையிட்ட பொதுமக்கள்!
வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டில் மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி பள்ளிவாசலை பார்வையிடும் நிகழ்ச்சி நடைபெற்றது. மும்மதத்தினர் இணைந்து தொடங்கி வைத்த இந்த நிகழ்வில், ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பங்கேற்று இஸ்லாமிய வழிபாட்டு முறைகளை நேரில் கண்டு அறிந்து கொண்டனர்.