பாலக்கோடு: தர்மபுரி பஞ்சப்பள்ளி சுகாதார நிலையத்தில் 39 தாய்மார்களுக்கு தங்கம் பரிசு
தர்மபுரி மாவட்டம், பஞ்சப்பள்ளி ஆரம்ப சுகாதார நிலையத்தில் 'தாய் மாமன் தங்க மோதிரம்' வழங்கும் திட்டத்தின் கீழ் 39 தாய்மார்களுக்கு தலா ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கப்பட்டது. மருத்துவர் ஸ்ரீ சோனியா தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் அரசு அதிகாரிகள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.