கொடைக்கானல்: கொடைக்கானல் மலைப்பகுதியில் சட்டவிரோத போர்வெல்: இயந்திரங்களை சிறைபிடித்த விவசாயிகள்
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் கீழ் மலைப் பகுதிகளில் அனுமதியின்றி போர்வெல் போட்ட 3 வாகனங்களை விவசாயிகள் சிறைபிடித்தனர். அரசு தடை இருந்தும் இரவு நேரங்களில் எஸ்டேட் அதிபர்களுக்காக போர்வெல் போடுவதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தாண்டிக்குடி காவல் நிலையத்தில் வருவாய்த்துறையினர் புகார் அளித்துள்ளனர்.