ஊத்தங்கரை: கனமழையால் வீடுகளுக்குள் புகுந்த நீர் - ஏழை குடும்பம் பாதிப்பு
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே படதாசம்பட்டி கிராமத்தில், கனமழையால் சிலம்பரசன்-சுதா தம்பதியினரின் வீட்டின் உள்ளே மழைநீர் புகுந்தது. இதில் பொருட்கள் சேதமடைந்த நிலையில், பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு நிவாரணம் வழங்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.