சேலம் தெற்கு: சேலம்: பணம் வைத்து சூதாடிய 8 பேர் கைது, 5 வாகனங்கள் பறிமுதல்!
சேலம் செவ்வாய்ப்பேட்டை லட்சுமி நகரில் சூதாடிய 8 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 12,550 ரூபாய் மற்றும் 5 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. தப்பி ஓடிய ஒருவரை போலீசார் தேடி வருகின்றனர்.