தருமபுரி: அக்டோபர் 2-ல் 250 ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம் - ஆட்சியர் அழைப்பு
தருமபுரி மாவட்டத்தில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு வரும் அக்டோபர் 2-ம் தேதி 250 கிராம ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம் நடைபெறுகிறது. இதில் பொதுமக்கள் அனைவரும் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் வே.சரவணன் அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார்.