தென்காசி: மேகமலை மக்கள் வெளியேற்றம்: 4-வது நாளாக நீடிக்கும் போராட்டம் - இன்று என்ன நடக்கும்?
ஸ்ரீவில்லிபுத்தூர் - மேகமலை புலிகள் காப்பகம் விவகாரத்தில், தங்களை வெளியேற்ற எதிர்ப்பு தெரிவித்து வருசநாடு பகுதி மக்கள் 4-வது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இன்றைய உச்ச நீதிமன்ற விசாரணை மலைக்கிராம மக்களின் தலைவிதியை தீர்மானிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.