மானூர்: திருநெல்வேலி: 24 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் - 3 பேர் கைது
திருநெல்வேலி மாவட்டம் சீதபற்பநல்லூர் அருகே ஆட்டோவில் கடத்தி வரப்பட்ட 24 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக வெங்கடேஷ், இசக்கி ராஜ், முருகேசன் ஆகிய 3 பேரை கைது செய்து பாளையங்கோட்டை சிறையில் அடைத்தனர்.