பெரம்பலூர்: பெரம்பலூரில் சைகை மொழி தின விழிப்புணர்வு பேரணி: மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், சர்வதேச காது கேளாதோர் மற்றும் சைகை மொழி தினத்தை முன்னிட்டு நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் ப. அப்துல் ராசிக் தொடங்கி வைத்தார். இதில் 50-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனர்.