ஊத்தங்கரை: ஊத்தங்கரையில் மளிகை கடை பூட்டை உடைத்து 19 ஆயிரம் ரூபாய் கொள்ளை!
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் மளிகை கடை பூட்டை உடைத்து 19 ஆயிரம் ரூபாயை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர். அருகில் இருந்த மற்றொரு கடையின் பூட்டும் உடைக்கப்பட்ட நிலையில், ஊத்தங்கரை போலீசார் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.