ஆம்பூர்: பழைய பொருட்கள் குடோனில் பயங்கர தீ விபத்து
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் உள்ள பழைய பொருட்கள் குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் பொருட்கள் அனைத்தும் எரிந்து சேதமடைந்தன. வெல்டிங் பணியின்போது தீ விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. ஆம்பூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.