இராமநாதபுரம்: இலங்கைக்கு கடத்தப்பட்ட 7.50 லட்சம் மாத்திரைகள் பறிமுதல்: ஒருவர் கைது
ராமநாதபுரம் அருகே இலங்கைக்கு கடத்த முயன்ற 7.50 லட்சம் வலி நிவாரணி மாத்திரைகள் மற்றும் சரக்கு வாகனத்தை மரைன் போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக ஓட்டுநர் நாகேஸ்வரன் கைது செய்யப்பட்டார். மேலும் வேதாளை கடற்கரையில் கைவிடப்பட்ட 286 கிலோ பீடி இலைகளும் கைப்பற்றப்பட்டன.