வேலூர்: வேலூர் ஆட்சியர் அலுவலகம் எதிரே அரசு ஓய்வூதியர்கள் தர்ணா போராட்டம்
புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் உட்பட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, வேலூர் சத்துவாச்சாரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கத்தினர் நூற்றுக்கும் மேற்பட்டோர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.