சேந்தமங்கலம்: கொல்லிமலையில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு இன்று முதல் தடை: மீறினால் அபராதம்!
நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் இன்று முதல் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு முழு தடை விதிக்கப்பட்டுள்ளது. காரவள்ளி அடிவாரத்தில் மாவட்ட ஆட்சியர் மதுபாலன் நேரில் ஆய்வு மேற்கொண்டார். விதிமுறைகளை மீறுவோருக்கு அபராதம் விதிக்கப்படும்.